Posts

Showing posts from September, 2025

டீ (கவிதை)

Image
உச்சி வெயிலுக்கு  டீ அருந்தி  இளைப்பாருகிறார் ..!  இளனி கடைகாரர் .

தாலிக்கயிறு (கவிதை)

Image
நொறுக்கப்பட்ட  இதயத்தின் நுழைவாயிலில், காத்திருக்கிற  தாலிக் கயிற்றில், வாழ்தலுக்கான முடிச்சு, வலி நிவாரண முடிச்சு, இணைப்பை  துண்டிக்கும் முடிச்சு.

குறட்டை(கவிதை)

Image
அம்மாக்களின்  குறட்டை  சப்தம்  எனக்கு பிடிப்பதில்லை,  அது  இறந்த அப்பாக்களை  நினைவு கூர்வதால்...

நகக்கண் (கவிதை)

Image
கவிதை எங்கே ..?                  அதன் வரிகள் எங்கே.?  அவளின் .....                  வெட்டப்படாத                   நகக்கண் அழுக்குகளுக்குள் ஒளிந்திருக்கிறது..

தாலியின் அருமை(கவிதை)

Image
தாலியின் அருமை தெரியவில்லை, கணவனின் காலில்,  கட்டப்படும் வரை ...  

புத்துயிர்(கவிதை)

Image
மடித்து வைத்த            துணிகளில் துளிர்கிறது  உந்தன் வாசம்.                          மீசை முறுக்கில்,      அணைப்பின் இறுக்கம். செல்லச் சிரிப்பில்,            புத்துயிர் பெறுகிறது.      மீள்கிறது.                  முகச்சுளிப்பும், விரல் அசைவும், உதட்டில் நனையும் சிரிப்பும், மூக்குத்தியின் ஊடே    பயணிக்க தயராகிறது,    காதலும் ஆத்மாவும்..!          மெல்ல நட ...                    இடையில் பயணிப்பவன் இறப்பதற்கு வாய்ப்பு அதிகம்.

இறந்த கவிதைகள் (கவிதை)

Image
உறக்கத்தில் செத்து  மடிகிறது கவிதைகள்,  அதை தோண்ட  முற்படும் போது,  கண்கள் விழித்துக்கொள்கிறது..

தூதுவளை(கவிதை)

Image
  தூதுவளைக்கு            பல்தேய்த்து விடுகிறான்      அந்த சிறுவன்.. அதில் முள்  இருக்கிறது என்றேன்.  இல்லை... இல்லை                            அதுதான் பல்,                    என்றான் அவன்...

பக்க குறியீடு (கவிதை)

Image
புத்கத்தில் ஊர்ந்த எறும்பு.. படிக்க தொடங்கியது...  அடுத்த பக்கத்தை  திருப்ப இயலாததால்...  அங்கேயே மரணித்தது  பக்க குறியீடாக... 

அநீதி (கவிதை)

Image
மரணச் செய்தி  காதுகளை துளைத்தது. நினைவுகள் ஒரு நிமிடம், எட்டுக்கால்பூச்சி சிறு ஆறுதல் , சட்டென்று கவ்விப்பிடித்தது  என் காலில் உள்ள ஈ யை... எங்கும் மரணம்...  'என் மேலும் நிகழ்த்தப்பட்டிருக்கறது'. இந்த அநீதிக்கு எதிராக  போர் தொடுக்கவா..? போராடவா...? "நான் மனிதன்"  ஒரே அடியில் வீழ்த்த முடியும். ஈ ஆணா ? பெண்ணா ? சிலந்தியும் இதனுள் அடக்கம். குழந்தைக்கான உணவா ? தனக்கான உணவா?  மரணம் அழகானது..!  விடுதலை தரக் கூடியது. அப்படி நிறைவான,  மரணத்தை தரும்  சிந்தனையின் பிறப்பிடம் எது , ஒருவேளை வேசியிடம், மாற்றுத்திறனாளிடம், மூப்படைந்தவரிடம், ஏதும்அறியா குந்தையிடம், இருக்கலாம் .  "ஈ க்களே என் மீது அமராதிர் , சிலந்திகளே ..என் மீது வேட்டையாடதீர் ..  என் இதயம் இறப்பை சுமந்து நிற்கிறது" .

திமிங்கலக்காதல்(கவிதை)

Image
  என் காதலும்,  கண்ணீரும்,  கரையெதுங்கி நிற்கின்றது.   திமிங்கலத்தை போல...

வெறுமை(கவிதை)

Image
ஒருமுறை  சிரிக்கவேண்டும், ஒருமுறை  அழுக வேண்டும்,  ' என் கல்லறையில் சாய்ந்து '....

நிலாநதி(கவிதை)

Image
ஓடும் நதியில்,                தவழ்கிறது நிலா..                அதில், தாவிக்குதித்து விளையாடுகிறது          கெண்டை மீன்....

நனையும் பிஸ்கட் (கவிதை)

Image
உன்தன் எச்சில் கொஞ்சம், கையில் பிசைந்த  பிசுபிசுப்பில் கொஞ்சம், தரையில் மிதித்த  பசையாய் கொஞ்சம், வாயில் ஒட்டிய  பிசிறுராய் கொஞ்சம்,  என்றும் உன்தன்,  'எச்சில் நனைந்த பிஸ்கட்டாய்'

அவள் ஒரு தொடர்கதை (கவிதை)

Image
அடங்காப்பிடாரி,   பைத்தியக்காரி,   அழுந்தக்பற்களை பதிக்கிறாள். நகங்களால் கீறி,  இரத்தத்தை சுவைக்கிறாள். அகோர சிரிப்புடன், மடியில் தலையை சாய்த்து,  அழுது,  இசைத்து,  மூணு மூணுக்கிறாள்,  தாலாட்டுகிறாள் ,  உதட்டில் முத்தமிட்டுமிடுகிறாள் , இறந்த மகனுக்கு  இடர் நேராதப்படி ... அவள் ஒரு தொடர்க்கதை..!

உயிர்மை(கவிதை)

Image
பயணப்பட்ட கால்களை, துரத்தி வந்த  கதைகளும், கவிதைகளும், அனுபவமும், வறுமையும்...             முற்றுப்புள்ளி வைக்க.                     உயிர் மை தீர்ந்த தருணம் அது.. .!

புத்தகத்தின் வாசனை (கட்டுரை)

Image
கோவில்பட்டியான் : அதலைக்காய், சிறுகிழங்கு, தீக்குச்சி, கடலைமிட்டாய் எங்கள்  கரிசல் மண்ணின் அடையாள வாசனைகள். இதேபோல சின்ன வயதில் இருந்தே அம்மாவின் வியர்வை படிந்த ஜாக்கெட்டின் வாசனை,ரூபாய் தாளின் வாசனை, வேட்டை நாய் மேல் வரும் வாசனை, ஆட்டுக் கொட்டாரங்களில் புலுக்கையின் வாசனை, சாணிகளை கரைத்து மொழுகிய வீட்டு முற்றத்தின் வாசனை,  பஜாரில் காபிக்கொட்டைகளை வறுக்கும் வாசனை, மஞ்சள், மல்லித்தலை மற்றும் மிளகாய் வற்றல் போன்றவை ரைஸ் மில்லில் அரைபடும் போது வரும் வாசனை, புதுத்துணியின் வாசனை, இவைகளுக்குள்தான் எப்பொழுதும் என் ஆன்மா சுழன்று கொண்டே இருக்கும்.  பக்கங்களை திருப்பினால்  அப்பளம் போல் உடையும் பழைய புத்தகத்தின் வாசனை ரொம்ப பிடிக்கும். இப்படியாக எல்லாமும் வாசனையாக உழன்று நினைவுகளாக இருந்தபோது,மறக்கமுடியாத நினைவுகளை என் வாழ்வில் உருவாக்கியது பழைய புத்தக கடைதான். வடக்கே கிருஷ்ணர் கோவில், தெற்கே செண்பகவல்லியம்மன் கோவில்,  மேற்கே பழைய பேருந்து நிலையம், கிழக்கே ரயில் நிலையம் இணையும் நாற்சந்தியில் ( நான்கு சாலை இணையும் இடத்தில்) கிருஷ்ணர் கோவில் போகும் வழியில் அந்த பழைய புத்தக கட...

காலத்தின் கடமை(கவிதை)

Image
ஆரம்பித்த இடத்தில்  முற்றுப்பெற்றுவிட்டேன், காதலால்..! அவ்விடத்திலேயே  தொடங்கி விட்டேன், அம்மாவின் கண்ணீரால்!

பட்டாம்பூச்சி (கவிதை)

Image
ஆண்டவன் கொடுத்த அழகை, அவனே அபகரித்ததில் ஆச்சரியமில்லை, எடுத்தவன் ' வண்ணங்களை ' மட்டுமே எடுத்தான். வாழ்க்கையை எடுக்கவில்லை.  நெருப்பில் சுட்ட கல்  வெப்பம் ஏற்று சிரிப்பது போல , நானும் சிரிக்கிறேன். வலியை தாங்கிய ' வண்ணமில்லா ' வண்ணத்துப்பூச்சியாய்...

மரணித்த உணர்வுகள்(கவிதை)

Image
மரணித்த உணர்வுகள் :  கவிதையை உணர முடிவதில்லை,  புத்தகங்களுக்கும் விடுப்புதான், கலைகளுடன் உரையாடுவதில்லை, இசையை வெறுக்கிறேன், நாடகம் அந்நியமாகிப்போனது, உடலுக்கும் மூளைக்குமான அரசியலா இது..! சாம்பலும் கருமையுமாக  தேன்சிட்டு, எதையும் இரசிக்கவில்லை, மீண்டும் மேலிருந்து கீழாக...