அநீதி (கவிதை)

மரணச் செய்தி 
காதுகளை துளைத்தது.
நினைவுகள் ஒரு நிமிடம், எட்டுக்கால்பூச்சி சிறு ஆறுதல் , சட்டென்று கவ்விப்பிடித்தது 
என் காலில் உள்ள ஈ யை...
எங்கும் மரணம்... 
'என் மேலும் நிகழ்த்தப்பட்டிருக்கறது'.
இந்த அநீதிக்கு எதிராக 
போர் தொடுக்கவா..?
போராடவா...?
"நான் மனிதன்" 
ஒரே அடியில் வீழ்த்த முடியும்.
ஈ ஆணா ? பெண்ணா ?
சிலந்தியும் இதனுள் அடக்கம்.
குழந்தைக்கான உணவா ? தனக்கான உணவா? 
மரணம் அழகானது..! 
விடுதலை தரக் கூடியது.
அப்படி நிறைவான, 
மரணத்தை தரும் 
சிந்தனையின் பிறப்பிடம் எது , ஒருவேளை வேசியிடம், மாற்றுத்திறனாளிடம், மூப்படைந்தவரிடம்,
ஏதும்அறியா குந்தையிடம், இருக்கலாம் . 
"ஈ க்களே என் மீது அமராதிர் , சிலந்திகளே ..என் மீது வேட்டையாடதீர் .. 
என் இதயம் இறப்பை சுமந்து நிற்கிறது" .

Comments

Popular posts from this blog

புத்தகத்தின் வாசனை (கட்டுரை)

கொரோனா(கட்டுரை)