கொரோனா(கட்டுரை)
ஈமச்சடங்கு : ஆட்டுப்புலுக்கை மற்றும் மூத்திர நெடி ஆளை துளைக்கும். ஒற்றை கோழிக்குஞ்சு வலம் வர, பெருச்சாளி பொந்துக்குள் நசுங்கிய பழத்தை இழுத்துச் செல்ல, பல வகை மர இலைகள் கட்டுகட்டாக கிடத்தி வைக்கப்பட்டடிருக்கும் . ஆற்றின் வழித்தடத்தை முகத்தில் வைத்திருப்பாள், பற்கள் தன்னை விடுவிக்க காத்துக் கிடக்கும் . இருத்த போதிலும் அகோரமாக சிரிப்பாள், தேங்காய் நாராய் இங்கொன்றும் அங்கொன்றுமாய் தலையில் வெள்ளை மயிர்கள் நடப்பட்டு இருக்கும் . இவையனைத்தையும் கசங்கிய அவள் கிழிசல் துணி காட்சியளிக்கும். ஓ....ஆத்தாள சங்க திருவணும், வாங்கி குடிக்கிற கழுதைக்கு, சுரக்குடுவை தோள்ல கிடக்கணுமாம்..! அது மாறில உங்கம்மா.. சொன்னான்னு பேப்பர் போனாவை தூக்கிட்டு வந்து நிக்க. உனக்கென்ன ஈமச்சடங்கு பத்தி தெரியணும், அவ்வளவுதானே.. எழுதிக்கோ எனக்கு படிப்பு வாசனை அறவே இல்ல, அதனால பத்து வயசுல இருந்தே ஆடுதான் மேய்ச்சுட்டு இருப்பேன்.பேயோ...! மனுச மக்கமாறோ... எதையும் பார்த்து பயப்பட மாட்டேன், அம்புட்டு தைரியமா, என்ன வளத்தாக, அப்போலாம், சாவுன்னா ஊரே ஒன்னு கூடி நிக்கும், இந்த காலத்துல சாவுக்கு காரணம் கேட்டுதா.. வரானுங்...