Posts

கூத்தாடி

விழுவதும் எழுவதும்(கவிதை)

Image
தைரியமாய்  நடந்து வருகிற,   சிறுவனின்  பிஞ்சுக் கால்களை,  பார்த்து ... நடுங்குகின்றன  தந்தையின்  கால்கள்.

மழைத்துளி (கவிதை)

Image
மழைத்துளிகளை வெறுக்கிறேன், தூண்டுகிறாய்...தேநீர் அருந்த , அவளுடன் இருந்த இரவை, அம்மாவின்... முந்தானை குடையை,  அப்பாவின் சாராய பாட்டிலை..., தாத்தாவின் சுருட்டை..., மழைத்துளியால்  மாண்டு போகிறது,  எந்தன்  தற்கொலை எண்ணம்.

டீ (கவிதை)

Image
உச்சி வெயிலுக்கு  டீ அருந்தி  இளைப்பாருகிறார் ..!  இளனி கடைகாரர் .

தாலிக்கயிறு (கவிதை)

Image
நொறுக்கப்பட்ட  இதயத்தின் நுழைவாயிலில், காத்திருக்கிற  தாலிக் கயிற்றில், வாழ்தலுக்கான முடிச்சு, வலி நிவாரண முடிச்சு, இணைப்பை  துண்டிக்கும் முடிச்சு.

குறட்டை(கவிதை)

Image
அம்மாக்களின்  குறட்டை  சப்தம்  எனக்கு பிடிப்பதில்லை,  அது  இறந்த அப்பாக்களை  நினைவு கூர்வதால்...

நகக்கண் (கவிதை)

Image
கவிதை எங்கே ..?                  அதன் வரிகள் எங்கே.?  அவளின் .....                  வெட்டப்படாத                   நகக்கண் அழுக்குகளுக்குள் ஒளிந்திருக்கிறது..